Images
  • Nz
    படம்: REUTERS 

நியூஸிலந்தில் மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தொற்று - புதிதாக 55 பேருக்கு பாதிப்பு

நியூஸிலந்தில் COVID-19 நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இன்று (13 அக்டோபர்) அங்கு 55 பேருக்கு நோய்த்தொற்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் ஆக்லந்தைச் சேர்ந்தவர்கள்.

நேற்று நியூஸிலந்தில் 43 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தது.

நியூஸிலந்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து டெல்ட்டா வகைக் கிருமி பரவத்தொடங்கியது.

அதிகம் பாதிக்கப்பட்ட ஆக்லந்தில் பல மாதங்களாக முடக்கநிலை நடப்பில் உள்ளது.

தற்போது நியூஸிலந்தில் தடுப்பூசி போடும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.

நியூஸிலந்தில் 12 வயதுக்கு மேற்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் 90 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 59 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

நியூஸிலந்தில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட தகுதியானவர்கள்.

- Reuters 

Top