Images
  • nz covid
    (படம்: REUTERS/Fiona Goodall)

நியூசிலந்தில் கிருமிப்பரவலை முறியடித்து விடலாம் என்ற நம்பிக்கை குலைந்தது

நியூசிலந்தில் புதிதாக 23 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்தினம் (செப்டம்பர் 10), கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டோர் எண்ணிக்கையை விட அது ஒரு மடங்குக்கும் அதிகம்.

நியூசிலந்தில் கிருமிப்பரவலை முறியடித்து விடலாம் என்ற நம்பிக்கையை அது குலைத்துள்ளது.

புதிதாகப் பாதிக்கப்பட்ட அனைவரும் ஆக்லந்தைச் (Auckland) சேர்ந்தவர்கள்.

புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரிப்பது, கிருமிப்பரவலுக்கு எதிரான போராட்டம் ஓய்ந்து விடவில்லை என்பதைக் காட்டுவதாக சுகாதார அதிகாரிகள் கூறினர்.

மக்கள் கட்டுப்பாட்டு விதிகளை மதித்து நடக்குமாறும், அறிகுறி ஏதும் தென்பட்டால் உடனே பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர்கள் அறிவுறுத்தினர்.

-Reuters 

Top