Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூஸிலந்து: மரங்களைத் தாக்கும் கொடிய நோயை மோப்பம் பிடிக்கும் நாய்கள்

நியூஸிலந்தின் வடக்குத் தீவில் (North Island) உள்ள பழமையான கவுரி (kauri) மரங்களைத் தாக்கும் கொடிய நோயை மோப்பம் பிடிக்க உதவி வருகின்றன 2 நாய்கள்.

வாசிப்புநேரம் -
நியூஸிலந்து: மரங்களைத் தாக்கும் கொடிய நோயை மோப்பம் பிடிக்கும் நாய்கள்

படம்: AFP / Adem ALTAN

நியூஸிலந்தின் வடக்குத் தீவில் (North Island) உள்ள பழமையான கவுரி (kauri) மரங்களைத் தாக்கும் கொடிய நோயை மோப்பம் பிடிக்க உதவி வருகின்றன 2 நாய்கள்.

அதற்காகவே, அந்த 2 நாய்களுக்கும் சுமார் ஓராண்டு காலம் பயிற்சி அளிக்கப்பட்டதாக The Guardian செய்தி நிறுவனம் கூறியது.

மண்ணில் பரவக்கூடிய அந்த நோயை அடையாளம் காண வழக்கமாக 6 வாரங்களாகும்.

ஆனால், சில வினாடிகளில் கண்டுபிடித்துவிடுகின்றன அந்த நாய்கள்.

கவுரி நோயை மோப்பம் பிடிக்கும் திறன் கொண்ட உலகின் முதல் நாய்கள் அவை என ஆக்லந்து மன்றத்தின் (Auckland council) உயிரியல் பாதுகாப்பு ஆலோசகர் கூறினார்.

அந்த நோய்க்கு மருந்து இல்லை.

பாதிக்கப்பட்ட மரங்கள் முற்றிலும் அழிந்துபோகும் அபாயத்தை எதிர்நோக்குவதாக The Guardian குறிப்பிட்டது.

அந்த நோய் மற்ற தீவுகளுக்கும் பகுதிகளுக்கும் பரவாமல் இருக்க, ஆக்லந்து மன்றம் முயற்சி செய்து வருகின்றது.

நாய்களின் மூக்கில், மனிதர்களின் மூக்கைவிட 40 மடங்கு அதிக உணர்திறன் உள்ளதாகக் கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்