Images
நியூசிலந்து: கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீயுடன் போராட்டம்
நியூசிலந்தின் தென் தீவில் காட்டுத்தீ, ஐந்து நாள்களாகத் தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது.
அதனை அணைப்பதற்குத் தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர்.
மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவது சிரமமாகியுள்ளது.
இதுவரை இல்லாத எண்ணிக்கையில் 20 ஹெலிகாப்டர்கள் தீயை அணைப்பதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நியூசிலந்தின் வேக்ஃபிட்(Wakefield) நகரத்தில் இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தற்போது அந்தப் பகுதியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

