Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூஸிலந்தில் வலுவான நிலநடுக்கம் - சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

நியூஸிலந்தில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
நியூஸிலந்தில் வலுவான நிலநடுக்கம் - சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

படம்: USGS

நியூஸிலந்தில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரிக்ட்டர் அளவில் 7.4ஆக நிலநடுக்கம் பதிவானது.

குடியிருப்பு இல்லாத கெர்மடேக் (Kermadec) தீவுகளுக்கு அருகில் நியூஸிலந்து நேரப்படி இன்று காலை 10.55க்கு நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது.

நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் சுனாமி பேரலை எழுந்தால் அது நியூஸிலந்தைச் சென்றடைய குறைந்தது 2 மணிநேரம் ஆகலாம் என்றும் நியூஸிலந்து குடிமைத் தற்காப்பு அமைப்பு கூறுகிறது.

இதற்கிடையே, நிலநடுக்கம் மையம்கொண்டிருக்கும் பகுதியில் இருந்து 300 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் சுனாமி பேரலைகள் எழுவதற்கான சாத்தியம் இருப்பதாக பசிஃபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் சொன்னது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்