Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூஸிலந்து: ஆக்லந்தில் மூன்றரை மாத முடக்கநிலை முடிவுக்கு வரவிருக்கிறது

நியூஸிலந்து: ஆக்லந்தில் மூன்றரை மாத முடக்கநிலை முடிவுக்கு வரவிருக்கிறது

வாசிப்புநேரம் -

நியூஸிலந்தின் ஆகப் பெரிய நகரான ஆக்லந்தில் மூன்றரை மாத முடக்கநிலை அடுத்த மாதத் தொடக்கத்தில் முடிவுக்கு வரவிருக்கிறது.

COVID-19 நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர இனி புதிய உத்தி கையாளப்படும் என்று நியூஸிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் தெரிவித்தார்.

அதிகம் தொற்றக்கூடிய டெல்ட்டா வகைக் கிருமியை முற்றாக அழிப்பதற்குப் பதிலாக அதனைக் கட்டுப்படுத்த முயல்வது தான் அந்தப் புதிய உத்தி.

அதன்படி அடுத்த மாதம் இரண்டாம் தேதியோடு முடக்கநிலைகள் ரத்து செய்யப்படும்.

டெல்ட்டா கிருமியை முற்றாக அழிப்பது சாத்தியமில்லை என்பது கசப்பான உண்மை என்றார் திருவாட்டி ஆர்டன்.

அதனை முற்றாக அழிக்க எந்த நாடாலும் இயலவில்லை என்பதை அவர் சுட்டினார்.

எனினும் அதனைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் பெரும்பாலான நாடுகளைக் காட்டிலும் நியூஸிலந்து நல்ல நிலையில் இருப்பதாக அவர் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்