Images
  • NZ
    படம்: AFP

மாண்டோருக்கு அஞ்சலி செலுத்த பெருந்திரளாகக் கூடிய கிரைஸ்ட்சர்ச் மக்கள்

நியூசிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் வாழும் மக்கள், அண்மையில், இரண்டு பள்ளிவாசல்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மாண்டோருக்கு அஞ்சலி செலுத்த பெருந்திரளாகக் கூடியுள்ளனர்.

கிரைஸ்ட்சர்ச் முழுவதும் உள்ள நினைவிடங்கள், தேவாலயங்கள் ஆகிய இடங்களுக்குச் சென்று, மலர் வளையங்கள் வைத்து, அவர்கள் தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர்.

அந்நாட்டுப் பிரதமர் ஜசிந்தா ஆர்டனும் (Jacinta Ardern) , வெல்லிங்டன் வட்டாரத்தில் உள்ள பள்ளிவாசலுக்குச் சென்று மலர் வளையம் வைத்து தமது இறுதி மரியாதையை செலுத்தினார்.

அந்தத் துயரச் சம்பவத்தில் மாண்டோர் எண்ணிக்கை, தற்போது 50-க்கு அதிகரித்துள்ளது. மேலும் 50 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில், 15 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
   

Top