Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அனைத்துலகப் பயணிகளை மீண்டும் வரவேற்கவிருக்கும் நியூசிலந்து

நியூசிலந்து அதன் எல்லைகளை அனைத்துலகப் பயணிகளுக்குத் திறந்துவிடுவதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
அனைத்துலகப் பயணிகளை மீண்டும் வரவேற்கவிருக்கும் நியூசிலந்து

(கோப்புப் படம்: AFP/Marty Melville)

நியூசிலந்து அதன் எல்லைகளை அனைத்துலகப் பயணிகளுக்குத் திறந்துவிடுவதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது.

எல்லைகள் கட்டங்கட்டமாகத் திறக்கப்படும்.

ஆஸ்திரேலியாவிலிருந்து முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட நியூசிலந்துக் குடிமக்களும் விசா அனுமதி வைத்திருப்போரும் வரும் ஜனவரி 16-ஆம் தேதிமுதல் நியூசிலந்து செல்லலாம்.

வரும் பிப்ரவரி 13ஆம் தேதியிலிருந்து, மற்ற பெரும்பாலான நாடுகளிலிருந்து, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட நியூசிலந்துக் குடிமக்களும் விசா அனுமதி வைத்திருப்போரும் நியூசிலந்துக்குள் அனுமதிக்கப்படுவர்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் இறுதியிலிருந்து, எல்லா நாடுகளிலிருந்தும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் அங்கு செல்லலாம்.

நியூசிலந்து செல்வோர் தனிமைப்படுத்திக்கொள்ளும் இடங்களில் தங்கத் தேவையில்லை. ஆனால் அவர்கள் 7 நாள்களுக்குச் சுயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்