Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூஸிலந்து-ஆஸ்திரேலியா இடையில் சிறப்புப் பயண ஏற்பாடு இம்மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது

நியூஸிலந்து-ஆஸ்திரேலியா இடையிலான சிறப்புப் பயண ஏற்பாடு இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது.

வாசிப்புநேரம் -

நியூஸிலந்து-ஆஸ்திரேலியா இடையிலான சிறப்புப் பயண ஏற்பாடு இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது.

நியூஸிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் அதனைத் தெரிவித்தார்.

அதற்கான நிபந்தனைகள் குறித்து இரு தரப்பும் இணக்கம் கண்டதாக அவர் சொன்னார்.

அதன்படி இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்வோர் இனிமேல் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

COVID-19 நோய்ப்பரவலை நியூஸிலந்து கடந்த ஓராண்டாய் வெற்றிகரமாகக் கட்டுக்குள் வைத்திருப்பதைத் தொடர்ந்து, இருவழிச் சிறப்புப் பயணத் திட்டம் சாத்தியமாகியிருப்பதாகத் திருவாட்டி ஆர்டன் சொன்னார்.

உலகின் மற்ற வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் ஆஸ்திரேலியாவும் நியூஸிலந்தும் கிருமிப்பரவலைச் சிறந்த முறையில் சமாளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கிருமிப்பரவலின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே மற்ற நாட்டினருக்கும் நிரந்தரவாசிகளுக்கும் அவை எல்லைகளை முடக்கியதே அதற்குக் காரணம்.

நியூஸிலந்திலிருந்து வரும் பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான மாநிலங்களின் எல்லைகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

இருப்பினும், ஆஸ்திரேலியாவின் சில நகரங்களில் அவ்வப்போது கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தலைதூக்கியதால் நியூஸிலந்து அதன் எல்லைகளைத் திறந்துவிடுவதை இதற்கு முன்பு தள்ளிப்போட்டிருந்தது.

- Reuters/ga
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்