Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மீண்டும் தலைதூக்கியிருக்கும் கிருமித்தொற்று.. நாடாளுமன்றக் கலைப்பை ஒத்திவைத்த நியூஸிலந்து

நியூஸிலந்தில் பொதுத் தேர்தலை முன்னிட்டு, அந்நாட்டுப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் (Jacinda Ardern), நாடாளுமன்றத்தைக் கலைப்பதைத் தள்ளிவைத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
மீண்டும் தலைதூக்கியிருக்கும் கிருமித்தொற்று.. நாடாளுமன்றக் கலைப்பை ஒத்திவைத்த நியூஸிலந்து

(படம்: REUTERS/Loren Elliott/POOL/File Photo)

நியூஸிலந்தில் பொதுத் தேர்தலை முன்னிட்டு, அந்நாட்டுப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் (Jacinda Ardern), நாடாளுமன்றத்தைக் கலைப்பதைத் தள்ளிவைத்துள்ளார்.

அதை வரும் திங்கட்கிழமை வரை அவர் ஒத்திவைத்துள்ளார்.

முன்னதாக, நாடாளுமன்றத்தை இன்று காலை கலைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடத்தப்படும் என்று நம்பப்படுகிறது.

தேர்தலை ஒத்திவைப்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை.

ஆனால், அவ்வாறு செய்வதற்கு இடமிருப்பதாகவும் திருவாட்டி ஆர்டன் கூறினார்.

ஆக்லந்து (Auckland) நகரில் மீண்டும் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் பிரதமர் ஆர்டனின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்