Images
  • Nz gun
    படம்: AFP

துப்பாக்கிகளைத் திருப்பிக் கொடுக்கும் நியூஸிலந்து மக்கள்

நியூஸிலந்து மக்கள் தங்களிடம் இருக்கும் துப்பாக்கிகளைத் திருப்பி கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

துப்பாக்கிகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையின் கீழ் நேற்று கிரைஸ்ட்சர்ச்சில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை அவர்கள் திருப்பிக் கொடுத்ததாக அதிகாரிகள் கூறினர்.

4 மாதத்துக்கு முன் கிரைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் மாண்டனர்.

அதைத் தொடர்ந்து துப்பாக்கிகள் தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி துப்பாக்கிகளைத் திரும்பக் கொடுத்து மக்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

துப்பாக்கிகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறும்.

இந்த நடவடிக்கையின் நோக்கம், ஆக ஆபத்தான துப்பாக்கிகளைப் புழக்கத்திலிருந்து மீட்டுக்கொள்வது தான் என்று அதிகாரிகள் கூறினர்.
 

Top