Images
  • nz covid
    (படம்: REUTERS/Fiona Goodall)

ஒரே நாளில் 100,000 பேருக்குத் தடுப்பூசி போட நியூஸிலந்து திட்டம்

நியூஸிலந்து, அதன் மக்களுக்கு ஒரே நாளில் 100,000 முறை COVID-19 தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ளது.

வரும் சனிக்கிழமை பரவலான தடுப்பூசி போடும் நடவடிக்கை இடம்பெறும் என்று நியூஸிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern) அறிவித்தார்.

12 வயதைத் தாண்டிய அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

உலக நாடுகளில் ஆக அதிகமான மக்கள் தடுப்பூசிபோட்டுக்கொண்ட நாடாகத் திகழ நியூஸிலந்து முனைவதாகவும் பிரதமர் ஆர்டன் சொன்னார்.

அந்நாட்டில் தற்போது 58 விழுக்காட்டினர், அதாவது, 2.44 மில்லியன் பேர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

அங்கு இன்று புதிதாக 43 பேருக்கு உள்ளூர் அளவில் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  

Top