Images
  • nz
    (கோப்புப் படம்: AFP/David Rowland)

நியூஸிலந்து: ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

நியூஸிலந்து, ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் தொடர்பில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் தடுப்பூசித் தகுதியை நிரூபிக்கவேண்டிய வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அது பொருந்தும்.

அந்த ஊழியர்கள், தொடர்ந்து அங்கே பணிபுரிய விரும்பினால், வரும் ஜனவரி 17-ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டு முடித்திருப்பது கட்டாயம். அந்த விதிமுறையை நடைமுறைப்படுத்தாத வர்த்தக நிறுவனங்கள், 10,000 டாலர் வரையிலான அபராதத்தை எதிர்நோக்க நேரிடும்.

விருந்தோம்பல், நிகழ்ச்சிகள், தொட்டுப் பழகும் வாய்ப்புள்ள வர்த்தகங்கள், உடலுறுதிக் கூடங்கள்போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், புதிய விதிமுறைக்கு உட்பட்டு நடக்கவேண்டும்.

நியூஸிலந்து மக்கள்தொகையில் 91 விழுக்காட்டினர், ஒரு முறையாவது தடுப்பூசி போட்டுள்ளனர். 84 விழுக்காட்டினர், முழுமையாகத் தடுப்பூசி போட்டு முடித்துள்ளனர். 

Top