Images
  • NZ attck relatives
    (படம்: Aqil Haziq Mahmud)

நியூசிலந்துத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் - குடும்பத்தாரின் நிலை பற்றி அறிந்துகொள்ளக் காத்திருக்கும் உறவினர்கள்

(வாசிப்பு நேரம்: 1 நிடத்திற்குள்)


நியூசிலந்தில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடந்து 24 மணி நேரம் ஆன நிலையில், இன்னும் சிலர் தங்கள் குடும்பத்தாரின் நிலை பற்றி அறிந்துகொள்ளக் காத்திருக்கின்றனர்.

அந்தத் தாக்குதல்களில் 49 பேர் மாண்டனர்.

அதிகாரிகள் இன்னமும் சடலங்களை பள்ளிவாசல்களிலிருந்து கிரைஸ்ட்சர்ச் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதாக, சேனல் நியூஸ்ஏஷியாவிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறினார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரின் பெயர்களை மட்டுமே தாங்கள் அறிந்திருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

ஹாக்லி கல்லூரி வளாகம் தற்போது தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் மையமாக இயங்கி வருகிறது.

தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருவதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் கூறப்பட்டுள்ளதாக ஒருவர் சொன்னார்.

கூடுதலான தகவல்கள் தேவை என்றும், சடலங்களைக் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கு மேலும் ஐந்து மணி நேரம் எடுக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறினர். 

Top