Images
  • vaccine (4)
    (படம்: REUTERS/Dinuka Liyanawatte)

நியூசிலந்தில் தடுப்பூசி போட மறுத்த 9 ஊழியர்கள் பணிநீக்கம்

நியூசிலந்தில், COVID-19 தடுப்பூசியைப் போட மறுத்த 9 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் எல்லைப் பகுதியில் வேலை செய்தவர்கள்.

நியூசிலந்தின் பொதுச் சுகாதார மீட்புச் சட்டத்தின்கீழ் தனிமைப்படுத்தப்படும் இடங்களிலும், எல்லைப் பகுதிகளில் உள்ள அரசாங்க அமைப்புகளிலும் வேலை செய்வோர் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம்.

நியூசிலந்தின் குடிநுழைவுத் துறை ஊழியர்களில் அனைவரும் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

அவர்களில் 85 விழுக்காட்டினர் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர். 

Top