Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூஸிலந்தின் வைகாட்டோ வட்டாரத்தில் கிருமிப்பரவல் தணிந்துள்ளது - கட்டுப்பாடுகள் தளர்வு

 நியூஸிலந்தின் வைகாட்டோ வட்டாரத்தில் கிருமிப்பரவல் தணிந்துள்ளது - கட்டுப்பாடுகள் தளர்வு 

வாசிப்புநேரம் -
நியூஸிலந்தின் வைகாட்டோ வட்டாரத்தில் கிருமிப்பரவல் தணிந்துள்ளது - கட்டுப்பாடுகள் தளர்வு

(கோப்புப் படம்: AFP)

நியூஸிலந்தின் வைகாட்டோ (Waikato) வட்டாரத்தில், கிருமிப்பரவல் தணிந்திருப்பதால் இன்று இரவிலிருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.

நியூஸிலந்தில், சமூக அளவில் புதிதாக 74 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 68 பேர், ஆக்லந்தைச் சேர்ந்தவர்கள்.

6 பேர், வைகாட்டோ வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், வைகாட்டோ வட்டாரத்தில் வசிக்கும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றி வெளியே சந்திக்கலாம்.

வைகாட்டோவுக்கு வெளியே பயணம் செய்ய, எவருக்கும் அனுமதி இல்லை.

அடுத்த மாதத் தொடக்கத்தில் உயர்நிலைப் பள்ளிகளைத் திறக்கத் திட்டமிடுவதாக ஆக்லந்து அறிவித்துள்ளது.

அதன்படி, வெவ்வேறு குழுக்களாக மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.

அவர்கள் வளாகத்தில் இருக்கும்போது முடிந்தவரை வெளிப்புறங்களில் அதிக நேரம் செலவிடுவர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்