Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கிருமிப்பரவலை முறியடிக்க இனி முடக்கநிலை அறிவிக்கப்போவதில்லை: நியூசிலந்து பிரதமர்

கிருமிப்பரவலை முறியடிக்க இனி முடக்கநிலை அறிவிக்கப்போவதில்லை: நியூசிலந்து பிரதமர்

வாசிப்புநேரம் -
கிருமிப்பரவலை முறியடிக்க இனி முடக்கநிலை அறிவிக்கப்போவதில்லை: நியூசிலந்து பிரதமர்

(படம்: AFP/Marty MELVILLE)

நியூசிலந்து பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern), வருங்காலத்தில் தொடர்ந்து
முடக்கநிலை நடைமுறைப்படுத்தி COVID-19 கிருமித்தொற்றைச் சமாளிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

மக்களுக்குத் தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தப்போவதாக அவர் சொன்னார்.

எத்தனை பேர் தடுப்பூசி போட்டு முடித்தால் முடக்கநிலை தேவைப்படாது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

ஆனால், குறிப்பிட்ட எண்ணிக்கையைத் திருமதி ஆர்டன் கூறவில்லை.

ஆக்லந்து முடக்கத்திலிருந்து வெளி வர, தொடர்பில்லாச் சம்பவங்கள் எப்படி ஏற்பட்டன என்பதைக் கண்டறிவது அவசியம் இல்லை என்றார் அவர்.

நியூசிலந்தில் புதிதாக
15 பேர் பாதிக்கப்பட்டனர்.

நாட்டு மக்களில் சுமார் 30 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டு முடித்துள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்