Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தங்களது உருவப்படத்தைத் திறந்து வைத்தபோது மனைவியின் அழகை ரசித்த முன்னாள் அதிபர் ஒபாமா

ஸ்மித்சோனியன் தேசிய உருவப்படக் காட்சியகத்தில் தன்னுடைய அதிகாரபூர்வ உருவப்படத்தையும் தமது மனைவியின் உருவப்படத்தையும் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா திறந்து வைத்தார்.

வாசிப்புநேரம் -


ஸ்மித்சோனியன் தேசிய உருவப்படக் காட்சியகத்தில் தன்னுடைய அதிகாரபூர்வ உருவப்படத்தையும் தமது மனைவியின் உருவப்படத்தையும் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா திறந்து வைத்தார்.

அப்போது அவர் தமது பெரிய காதுகளையும் நரை முடியையும் மனைவியின் அழகோடு ஒப்பிட்டு நகைச்சுவையாகப் பேசினார்.

காட்சியகத்தில் அதிபர்களின் உருவப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தங்களது உருவப்படங்களை வரைய தம்பதியினர் கெஹிண்ட் வாய்லியையும் (Kehinde Wiley) ஏமி ஷரால்டையும் (Amy Sherald) தேர்ந்தெடுத்தனர்.

ஸ்மித்சோனிய உருவப்படங்களை வரைந்த முதல் கருப்பின ஓவியர்கள் இவர்கள்.

திரு ஒபாமா தமது மனைவி உருவப்படத்தில் அழகாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு தமது மனைவியின் இயற்கை அழகு காரணம் என்றும் கூறினார்.

அதே சமயத்தில் தான் அவ்வளவு அழகானவர் இல்லை என்பதால் தன்னை வரைய ஓவியர் சிரமப்பட்டிருப்பார் என்றும் அவர் நகைச்சுவையாகக் கூறினார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்