Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிளாஸ்டிக்கிற்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் "போர்"

ஆண்டுக்கு 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் பெருங்கடல்களில் கலப்பதாக அறிவியல் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
பிளாஸ்டிக்கிற்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் "போர்"

(படம்: AFP/JOSEPH EID)

ஆண்டுக்கு 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் பெருங்கடல்களில் கலப்பதாக அறிவியல் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

கடல் உயிரினங்கள் பிளாஸ்டிக் பைகளால் மடிவது, கடற்கரைகளின் அழகு பிளாஸ்டிக் பைகளால் நாசம் செய்யப்படுவது; இவற்றுக்கு எதிராகப் பலர் குரல் எழுப்பியுள்ளனர்.

சமூக ஊடகங்களிலும் அதனைக் குறித்துப் பலர் கவலை தெரிவித்திருக்கின்றனர்.

பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் குறைக்க பலர் தீவிரமாகக் களம் இறங்கியிருக்கின்றனர் எனவும் சுற்றுப்புற ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

ஆகையால், அந்தப் பிரச்சினைக்கு விரைவிலேயே தீர்வு காண முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இருப்பினும், நிலத்திலிருந்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மட்டுமே அந்த முயற்சிகள் பொருந்தும் என்றும் கப்பல்களில் இருந்து வருபவற்றுக்கு அல்ல என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

மீன்பிடிக் கப்பல்கள் முதலானவற்றில் இருந்து சுமார் 2 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதாக அவர்கள் கூறினர்.




 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்