Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நொவல் கொரோனா கிருமிக்கு அதிகாரபூர்வ பெயர் - Covid-19

நொவல் கொரோனா கிருமிக்கு Covid-19 என்று உலக சுகாதார நிறுவனம், அதிகாரபூர்வமாய்ப் பெயர் சூட்டியுள்ளது.

வாசிப்புநேரம் -
நொவல் கொரோனா கிருமிக்கு அதிகாரபூர்வ பெயர் - Covid-19

(படம்: AFP/STR)

நொவல் கொரோனா கிருமிக்கு, Covid-19 என்று உலக சுகாதார நிறுவனம் அதிகாரபூர்வமாய்ப் பெயர் சூட்டியுள்ளது.

கிருமித்தொற்று காரணமாக மாண்டோர் எண்ணிக்கை 1,000-ஐ கடந்து விட்டது. பல்லாயிரக் கணக்கானோர் கிருமிப் பாதிப்பால் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தி, முறியடிக்க சாத்தியமான எல்லா வழிகளிலும் மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் ஜிப்ரியிஸஸ் (Tedros Ghebreyesus) வலியுறுத்தினார்.

ஒரு குழுவைச் சார்ந்தோ, நாட்டைச் சார்ந்தோ கிருமி வகைப்படுத்தப்படக்கூடாது என்பதால், அதற்குப் புதிய பொதுப் பெயர் வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தினர்.

சென்ற ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி கிருமித் தொற்று பற்றி உலக சுகாதார நிறுவனத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.

"Corona" - "Virus" - "Disease" ஆகிய மூன்று வார்த்தைகளின் அடிப்படையிலும், சென்ற ஆண்டைக் குறிக்கும் வகையிலும் கிருமிக்கு Covid-19 என்ற பெயர், சூட்டப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்