Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பெய்ரூட் வெடிப்பின் தொடர்பில் 16 பேர் கைது

பெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தின் தொடர்பில், லெபனானிய அதிகாரிகள் 16 பேரைக் கைது செய்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
பெய்ரூட் வெடிப்பின் தொடர்பில் 16 பேர் கைது

(படம்: Reuters/Mohamed Azakir)

பெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தின் தொடர்பில், லெபனானிய அதிகாரிகள் 16 பேரைக் கைது செய்துள்ளனர்.

சரக்குக் கிடங்கில் பணிபுரிந்த துறைமுக, சுங்கத் துறை ஊழியர்கள் 18 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

அவர்கள் அங்கு, பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தவர்கள்.

பெய்ரூட்டின் துறைமுகப் பொது நிர்வாகி ஹசான் கோரேடம் (Hassan Koraytem) கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்.

கோரேடம், லெபனான் சுங்கத்துறைத் தலைவர் உள்பட ஏழு பேரின் வங்கிக் கணக்குகளை, லெபனானின் மத்திய வங்கி முடக்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

செயலின்மை, கவனக் குறைவு ஆகியவையே வெடிப்புக்குக் காரணம் என முதற்கட்டப் புலனாய்வில் தெரியவந்துள்ளது.

இரு நாள்களுக்கு முன் ஏற்பட்ட வெடிப்பு, பக்கத்து வட்டாரங்களிலும் அதிர்வை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் குறைந்தது 145 பேர் மாண்டர்.
5,000 பேர் காயமுற்றனர். பலரை இன்னும் காணவில்லை.

ஏற்கெனவே மோசமான பொருளியல் நெருடிக்கடி, கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நாட்டில் சுமார் கால் மில்லியன் பேர் இருப்பிடம் இன்றித் தவிக்கின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்