Images
  • OFO Charity (1)
    (படம்: REUTERS/Jason Lee) 

Ofo வெளிநாட்டு சந்தைகளில் பெரிதளவு விரிவாக்கம் - 900 மில்லியன் டாலர் நிதி திரட்டு

சீனாவின் சைக்கிள் பகிர்வு நிறுவனமான Ofo, Ali Baba குழுமம் மேற்கொண்ட நிதி திரட்டு முயற்சியின் மூலம் 900 மில்லியன் டாலர் வரை நிதி திரட்டியுள்ளது.

Ofo நிறுவனம் வெளிநாட்டு சந்தைகளில் பெரிதளவு விரிவாக்கம் கண்டு வரும் வேளையில், அந்த நிதி திரட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் அது பல புதிய சேவைகளை வழங்க முற்படுகிறது. அதன் மிதிவண்டிகளும் பலதரப்பட்ட வகைகளில் அமையப் பெற்றிருக்கின்றன.

தற்போது நடைபெற்ற அந்த நிதி திரட்டு முயற்சியில், Haofeng குழுமம், Tianhe Capital, Junli Capital முதலான நிறுவனங்களும் கலந்துகொண்டு நிதியளித்தன.

இதுவரை, Ofo நிறுவனம் 21 நாடுகளில் இயங்கி வருகிறது. அது 200 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.  

உங்கள் கருத்து

Top