Images
  • alelia murphy
    (படம்: Facebook/1199SEIU United Healthcare Workers East)

அமெரிக்காவின் ஆக மூத்த மாதுக்கு வயது 114

அமெரிக்காவின் ஆக மூத்த மாது என்ற பெருமையை எலேலியா மர்ஃபி (Alelia Murphy) பெறுகிறார். அவருக்கு வயது 114.

அவரின் பிறந்தநாளைக் கொண்டாடவும் அங்கீகரிக்கவும் நியூயார்க் நகரின் ஹார்லம் வட்டாரத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 6), அதிகாரிகள் அக்கம்பக்கத்தினரை ஒன்றுதிரட்டி எலேலியா மர்ஃபியின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

அத்துடன் ஜூலை 6ஆம் தேதியை 'எலேலியா மர்ஃபி அர்ப்பணிப்பு தினம்' என அதிகாரிகள் அங்கீகரித்தனர். சமூகத்திற்குப் பங்களித்தற்காக எலேலியா மர்ஃபி பாராட்டப்பட்டார்.  

Top