Images
  • tokyo olympics
    (படம்: AFP/CHARLY TRIBALLEAU)

கிருமிப்பரவல் சூழலால் சரியாகக் கூடத் தூங்க முடியவில்லை! - அனைத்துலக ஒலிம்பிக் குழுத் தலைவர்

அனைத்துலக ஒலிம்பிக் குழுத் தலைவர் தாமஸ் பாக் (Thomas Bach) கிருமிப்பரவல் சூழலால் தமக்குக் கவலை உண்டாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதன் காரணத்தால் தம்மால் சரியாகக் கூடத் தூங்க முடியவில்லை என்றும் அவர் சொன்னார்.

அனைத்துலக ஒலிம்பிக் குழுக் கூட்டத்தில் பேசிய அவர், சென்ற ஆண்டிலிருந்து இந்த ஆண்டுக்குப் போட்டிகளைத் தள்ளிவைத்ததைப் பற்றியும் பேசினார்.

அவ்வாறு போட்டிகளைத் தள்ளிப் போட்டது நினைத்ததைவிடச் சவால் மிக்கதாக அமைந்தது என்றும் திரு. பாக் சொன்னார்.

வரும் வெள்ளிக்கிழமை துவங்கவுள்ள போட்டிகளுக்கான பாதையில் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தோக்கியோவில் இன்னும் அவசரநிலை நடப்பில் உள்ளது. அத்துடன் மக்களில் பலரும் போட்டிகளுக்கெதிரான கருத்துகளைக் கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டினார்.

இதற்கிடையில், ஒலிம்பிக் கிராமத்தில் (Olympic Village) நால்வருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

அதனால் ஆயிரக்கணக்கான விளையாட்டாளர்கள், செய்தியாளர்கள், அதிகாரிகள் ஒன்றுகூடும்போது கிருமிப்பரவல் கடுமையாகலாம் என அஞ்சப்படுகிறது.  

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பாக மீடியாகார்ப், தோக்கியோ 2020 போட்டிகளை மிக விரிவாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது. மேல்விவரங்களுக்கு mediacorp.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தை நாடவும்.

Top