Images
  • olympic interesting facts derek redmond - use this
    (படம்: AP Photo/Denis Paquin, File)

ஒலிம்பிக் சுவாரஸ்யங்கள்: போட்டியின்போது மகனுக்குக் கை கொடுக்க விரைந்து ஓடிய தந்தை

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. அதையொட்டி, ஒலிம்பிக் விளையாட்டுகளில் இதுவரை நடந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் 'செய்தி' ரசிகர்களுக்காக...

1992இல் பார்சலோனாவில் (Barcelona) நடைபெற்ற ஒலிம்பிக் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் அரை இறுதிச் சுற்றின்போது காயமுற்றார் பிரிட்டனைச் சேர்ந்த டெரெக் ரெட்மண்ட் (Derek Redmond).

அவர் தொடையின் தசை நார் கிழிந்தது.

பந்தயத்தில் வெற்றி மட்டுமா இலக்கு? முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் வலியையும் பொருட்படுத்தாமல் போட்டியைத் தொடர்ந்தார் ரெட்மண்ட்.

ஆனால், வலியில் துடிக்கும் மகனைக் காண இயலாத தந்தை, தடத்திற்கு ஓடி வந்து கை கொடுத்தார்.

ரெட்மண்ட் போட்டியைத் தானாக முடிக்க வேண்டும் என்பதால், முடிவு எல்லைக்கு முன் தந்தை கைவிட்டார்.

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பாக மீடியாகார்ப், தோக்கியோ 2020 போட்டிகளை மிக விரிவாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது.
மேல்விவரங்களுக்கு mediacorp.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தை நாடவும். 

Top