Images
  • tokyo olympics
    (படம்: REUTERS/Issei Kato)

ஒலிம்பிக் போட்டிகளை ஓராண்டு காலம் தள்ளிவைக்க அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் இணக்கம்

2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுகின்றன.

போட்டிகளை ஒத்திவைக்குமாறு ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே முன்வைத்த கோரிக்கையை அனைத்துலக ஒலிம்பிக் மன்றத் தலைவர் தாமஸ் பாக் (Thomas Baak) ஏற்றுக்கொண்டுள்ளார்.

போட்டிகள் திட்டமிட்டபடி,ஜூலை 24ஆம் தேதி தொடங்காது என மன்றத்தில் ஆக அதிகக் காலம் உறுப்பினராகப் பதவி வகித்துவரும் திரு. டிக் பவுண்ட் (Dick Pound)முன்னதாய்த் தெரிவித்திருந்தார்.

ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என மன்றத்திற்குப் பல உலக நாடுகள் நெருக்குதல் அளித்து வந்தன.

விளையாட்டுக் குழுக்களைத் தோக்கியோ போட்டிகளுக்கு அனுப்பப்போவதில்லை எனக் கனடாவும் ஆஸ்திரேலியாவும் நேற்றே கூறின.  

Top