Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலக நாடுகள் பலவற்றில் பரவத் தொடங்கியுள்ள ஒமக்ரான் கிருமி

உலக நாடுகள் பலவற்றில் பரவத் தொடங்கியுள்ள ஒமக்ரான் கிருமி

வாசிப்புநேரம் -
உலக நாடுகள் பலவற்றில் பரவத் தொடங்கியுள்ள ஒமக்ரான் கிருமி

படம்: AFP

புதிய ஒமக்ரான் (Omicron) வகை கிருமி, நெதர்லந்துத் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் (Amsterdam), 13 தென்னாப்பிரிக்கப் பயணிகளிடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

2 விமானச் சேவைகளில் அங்கு சென்ற 61 பேருக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் அந்த 13 பேரும் அடங்குவர்.

ஜெர்மனியில் மூவருக்கும், டென்மார்க்கில் இருவருக்கும் Omicron வகை கிருமி அடையாளம் காணப்பட்டுள்ளது.

கனடா, ஆஸ்திரேலியா, ஹாங்காங் ஆகிய இடங்களிலும் Omicron நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்னும் கூடுதலான நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.

இந்தோனேசியா, 8 ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இன்றிலிருந்து தடை விதித்துள்ளது.

மாலத் தீவுகள், எகிப்து, சவூதி அரேபியா ஆகிய நாடுகளும் அதுபோன்ற கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்