Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Omicron வகைக் கிருமி, ஐரோப்பிய நாடுகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கலாம்

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள Omicron எனும் புதுவகையான கொரோனா கிருமி, ஐரோப்பிய நாடுகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள Omicron எனும் புதுவகையான கொரோனா கிருமி, ஐரோப்பிய நாடுகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு எச்சரிக்கை விடுத்த ஐரோப்பிய நோய்த் தடுப்பு, கட்டுப்பாட்டு நிலையம் (ECDC), புதுவகைக் கிருமி எவ்வாறு பரவும் என்பது குறித்துத் தெளிவு இல்லை என்பதையும் சுட்டியது.

Omicron கிருமியைப் பொறுத்தவரை, தடுப்புமருந்துகளின் செயலாற்றல், கிருமி தொற்றியவர்களுக்கு மீண்டும் கிருமித்தொற்று ஏற்படுமா போன்றவை பற்றி முழுமையான தகவல் இல்லை எனக் கூறப்படுகிறது.

எனினும், Omicron கிருமித்தொற்று, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஐரோப்பியப் பொருளியலுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கலாம் என நிலையம் தெரிவித்தது.

- AFP
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்