Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Omicron வகைக் கிருமியைச் சமாளிக்கமுடியும்: முன்னணி தடுப்புமருந்து தயாரிப்பு நிறுவனங்கள்

புதிய ஒமிக்ரான் (Omicron) வகைக் கிருமியைச் சமாளிக்கும் ஆற்றல் இருப்பதாக முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -
Omicron வகைக் கிருமியைச் சமாளிக்கமுடியும்: முன்னணி தடுப்புமருந்து தயாரிப்பு நிறுவனங்கள்

(கோப்புப் படம்: AFP/GUILLAUME SOUVANT)

புதிய ஒமிக்ரான் (Omicron) வகைக் கிருமியைச் சமாளிக்கும் ஆற்றல் இருப்பதாக முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தேவைப்பட்டால், 100 நாளுக்குள் புதிய தடுப்பு மருந்தைத் தயாரித்து விநியோகிக்க முடியும் என்று Pfizer-BioNTech உறுதியளித்துள்ளது.

புதுவகை COVID-19 கிருமிக்கு எதிராகத் தனது தடுப்பு மருந்து எப்படி வேலை செய்கிறது என்பது குறித்த தரவுகளை 2 வாரத்தில் திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தரவுகள் கிடைப்பதன்மூலம் தடுப்பு மருந்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா என்பது தெரியவரும் என்று Pfizer-BioNTech கூறியது.

ஒமிக்ரான் கிருமி வகைக்கு ஏற்ற Booster கூடுதல் தடுப்பூசியை உருவாக்கவுள்ளதாக Moderna நிறுவனம் தெரிவித்துள்ளது.

Novavax மருந்துத் தயாரிப்பு நிறுவனம், புதிய தடுப்புமருந்தை உருவாக்குவதில் மும்முரம் காட்டிவருகிறது.

தடுப்புமருந்து அடுத்த சில வாரங்களில் சோதனைநிலைக்கு தயாராக்கப்படும் என்றும் அது நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்