Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'Omicron பரவலைத் தடுக்க உலகெங்கிலும் விதிக்கப்படும் பயணத் தடைகள் -நாடுகளுக்கு நிதானம் தேவை'

Omicron வகைக் கிருமியின் பரவலைத் தடுக்க உலகெங்கிலும் அவசர அவசரமாக விதிக்கப்படும் பயணத் தடைகள் குறித்து உலகச் சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

Omicron வகைக் கிருமியின் பரவலைத் தடுக்க உலகெங்கிலும் அவசர அவசரமாக விதிக்கப்படும் பயணத் தடைகள் குறித்து உலகச் சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

தடைகளை அவசரமாக விதிப்பதால், கவனமாக இருக்கும்படி அது எச்சரித்தது. நாடுகள் நிதானமாகச் செயல்படவேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.

நாடுகள், கிருமியின் அபாய அளவின் அடிப்படையில், விஞ்ஞான அணுகுமுறையைப் பின்பற்றுபடி நிறுவனம் பரிந்துரைத்தது.

பாதிக்கப்பட்ட நாடுகளுடன் ஒன்றாகப் பணியாற்றி, கிருமியைப் பற்றி இன்னும் கூடுதலான தகவல்களைப் பெறவேண்டும் என அதன் பேச்சாளர் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு பயண நடவடிக்கையின் குறை நிறைகளும் ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்