Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதற்கான ஒப்பந்தம் அடுத்த மாதம்வரை நீட்டிப்பு: OPEC

OPEC எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பும் அதன் கூட்டணி நாடுகளும் எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தை அடுத்த மாதம் வரை நீட்டித்துள்ளன.

வாசிப்புநேரம் -
எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதற்கான ஒப்பந்தம் அடுத்த மாதம்வரை நீட்டிப்பு: OPEC

(படம்: REUTERS/Todd Korol)

OPEC எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பும் அதன் கூட்டணி நாடுகளும் எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தை அடுத்த மாதம்வரை நீட்டித்துள்ளன.

எண்ணெய் உற்பத்தியைச் சுமார் 10 விழுக்காடுவரை குறைக்க, கடந்த ஏப்ரல் மாதத்தில் OPEC நாடுகள் இணக்கம் தெரிவித்தன.

மே மாதம் தொடங்கிய ஒப்பந்தத்தின்படி, தினமும் 9.7 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க, நாடுகள் ஒப்புக்கொண்டன.

இம்மாத இறுதிவரை நடப்பிலிருக்கத் திட்டமிடப்பட்ட ஒப்பந்தம், தற்போது ஜூலை மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகமெங்கும் COVID-19 நிலவரம் காரணமாகப் பல நாடுகளில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டிருப்பதால் எண்ணெய்க்கான தேவை கணிசமாகக் குறைந்துள்ளது. விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்