Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்டார்

அமெரிக்காவின் டல்லஸ் நகர நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவரைக் காவல்துறை அதிகாரிகள் சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்டார்

(கோப்புப் படம்: AFP)

அமெரிக்காவின் டல்லஸ் நகர நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவரைக் காவல்துறை அதிகாரிகள் சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவருக்கு 22 வயது என்றும், அந்தச் சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

ஆடவர் நடைபாதையில் இருந்து கொண்டு நீதிமன்ற நுழைவாயிலை நோக்கிச் சுட்டதாகக் கூறப்பட்டது.

குண்டு துளைக்காத சட்டையை அணிந்திருந்த அவர் தம் முகத்தை மறைத்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவல்துறை அதிகாரிகளால் சுடப்பட்ட ஆடவர் மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் மாண்டார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவர் இரண்டு வருடம் இரணுவத்தில் இருந்ததாகவும், அண்மையில் பல்கலைக்கழகப் படிப்பை முடித்தவர் என்றும் கூறப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்