Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 எவ்வாறு உருவானது? அதைக் கண்டறியும் இறுதி முயற்சியாகப் புதிய பணிக்குழு அமையலாம்...

COVID-19 நோய் எவ்வாறு உருவெடுத்தது என்பது பற்றி கண்டறிவதற்கான இறுதி முயற்சியாகப் புதிய பணிக் குழு ஒன்று அமையலாம் என உலகச் சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.

வாசிப்புநேரம் -

COVID-19 நோய் எவ்வாறு உருவெடுத்தது என்பது பற்றி கண்டறிவதற்கான இறுதி முயற்சியாகப் புதிய பணிக் குழு ஒன்று அமையலாம் என உலகச் சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.

Sago என அழைக்கப்படும் பணிக் குழுவில் இடம்பெற 26 நிபுணர்களை அது முன்மொழிந்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் ஒன்றரை ஆண்டுக்கு-முன் அந்தக் கிருமி அடையாளம் காணப்பட்டது.

ஆனால் அது எவ்வாறு தோன்றியது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

வூஹான் நகர் சந்தைகளில், அந்தக் கிருமி விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியதா அல்லது, ஆய்வுக்கூடம் ஒன்றில் இருந்து அது கசிந்ததா என்பது பற்றி பணிக்குழு ஆராயவிருக்கிறது.

ஆய்வுக்கூடம் ஒன்றிலிருந்து கிருமி கசிந்திருக்கலாம் எனும் சாத்தியத்தை சீனா மறுத்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம், உலகச் சுகாதார நிறுவனக் குழு ஒன்று, அந்தக் கிருமி, வௌவால்களிடம் இருந்து பரவியிருக்கலாம் எனக் கூறியிருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்