Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிள்ளைகளைக் கடத்தி, தத்துக்கொடுக்கும் முயற்சி.. முறியடிக்க முயலும் ஆஸ்திரேலியா

தென்கிழக்காசிய நாடுகளில் பிள்ளைகளைக் கடத்தித் தத்துக்கொடுக்கும் முயற்சியை முறியடிக்கப்போவதாக ஆஸ்திரேலியா உறுதிபூண்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

தென்கிழக்காசிய நாடுகளில் பிள்ளைகளைக் கடத்தித் தத்துக்கொடுக்கும் முயற்சியை முறியடிக்கப்போவதாக ஆஸ்திரேலியா உறுதிபூண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் தொண்டூழியர்களின் ஆதரவுக்காகவும் நன்கொடைக்காகவும் கம்போடியா போன்ற நாடுகளில் சிறுவர்கள் கடத்தப்பட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்படுகின்றனர்.

Orphanage Tourism என்றழைக்கப்படும் அந்த முயற்சியைத் தடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் செனட்டர் லிண்டா ரெனொல்ட்ஸ் (Linda Reynolds) வலியுறுத்தினார்.

இம்மாதிரியான ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நன்கொடை வழங்கும் முக்கியமானவர்களில் ஆஸ்திரேலியர்கள் அடங்குவர் என்றும் அதனாலேயே இத்தொழில் பெரிதாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வட்டாரத்தில் பிரச்சினை உருவாக ஆஸ்திரேலியா காரணமாகிவிட்டது. எனவே அது மற்ற நாடுகளுடன் சேர்ந்து இதை ஒழிக்கப் பாடுபடவேண்டும் என்று லிண்டா தெரிவித்தார்.

'Smart Volunteering' எனும் இயக்கம் வாயிலாக, வெளிநாட்டு ஆதரவற்றோர் இல்லங்களில் குறுகியகால, திறனற்ற தொண்டூழியத் திட்டங்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் பற்றி ஆஸ்திரேலியர்களுக்கு எடுத்துரைக்கத் திட்டமிடப்படுகிறது.

தொண்டூழியர்கள் என்ற பெயரில் பெரும்பாலும் இளையர்களும், மாணவர்களுமே இத்தகைய ஆட்கடத்தல் சம்பவங்களில் தெரியாமல் போய் மாட்டிக்கொள்வதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்தார்.

ஆதரவற்ற பிள்ளைகளின் நலனைக் கருதி இந்தப் பிரச்சினையை உடனடியாகச் சரிசெய்ய வேண்டியது அவசியம் என்றார் அவர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்