Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அசந்து தூங்கியதால் ஆடவருக்குச் சிறைத்தண்டனை

ஃபுளோரிடா மாநிலத்தில் அசந்து தூங்கிய ஆடவர் ஒருவர் நீதிமன்ற விசாரணையில் நடுவர் குழுப் பணிககுச் செல்லத் தவறியதால் சிறைக்குச் செல்லவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

ஃபுளோரிடா மாநிலத்தில் அசந்து தூங்கிய ஆடவர் ஒருவர் நீதிமன்ற விசாரணையில் நடுவர் குழுப் பணிககுச் செல்லத் தவறியதால் சிறைக்குச் செல்லவிருக்கிறார்.

21 வயது டியான்ட்ரே சோமர்வில் (Deandre Somerville) ஆகஸ்ட் மாதம் நீதிமன்ற நடுவர் குழுவில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வழக்கு விசாரணையின் முதல் நாளன்று தூங்கிக் கொண்டிருந்த ஆடவர் தாம் நீதிமன்றத்துக்கு வரத் தாமதமாகும் என்பது பற்றி அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை.

நடுவர் பணியைத் தவறவிட்டதற்காக ஆடவருக்கு 10 நாள் சிறைத்தண்டனையுடன், 150 மணிநேர சமூகச் சேவை உத்தவும், சுமார் 200 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

தண்டனையை நிறைவேற்றிய பின்னர் பேசிய சோமர்வில், தமக்கு விதிக்கப்பட்ட தண்டனை மிதமிஞ்சியது என்றுகூறி அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாகக் கூறினார்.

தூங்கியதால் தாம் இப்போது ஒரு குற்றவாளியைப் போல உணர்வதாகக் கூறினார். வேலை தேடும் போது ஒவ்வொரு முறையும் தாம் செய்த குற்றத்தைப் பற்றி இனி விளக்கம் தரவேண்டியிருக்கும் என்றும் கூறினார்.

நேரம் கடந்து தூங்கியதை உணர்ந்தபோது நீதிமன்றத்திடம் தெரிவிக்கத் தாம் அஞ்சியதாகவும் அவர் கூறினார்.

நீதிமன்றத்திடம் தமது மன்னிப்பைத் தெரிவிக்க கடிதம் ஒன்றையும் எழுதுமாறு ஆடவருக்கு உத்தரவிடப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்