Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவில் கடுமையான காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்படக்கூடும் - அதிகாரிகள் எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் நடப்புக் கோடைக் காலத்தின்போது கடுமையான காட்டுத் தீ ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவில் கடுமையான காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்படக்கூடும் - அதிகாரிகள் எச்சரிக்கை

படம்: AFP/Rob Griffith

ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் நடப்புக் கோடைக் காலத்தின்போது கடுமையான காட்டுத் தீ ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ், குவின்ஸ்லந்து ஆகிய மாநிலங்கள் முழுவதும் காட்டுத் தீயால் கடுமையான சேதங்கள் ஏற்படக்கூடும்.

ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள அந்த இரண்டு மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிகிறது.

சில இடங்களில் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தீயணைப்பாளர்கள் நெருப்பை அணைக்கத் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

தீ பரவி வரும் சில இடங்களை அதிகாரிகளால் சென்றடைய முடியவில்லை.

மரபுடைமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரு தங்கும் விடுதியும், மேலும் இருபது கட்டடங்களும் தீயில் கருகி நாசமாகி விட்டன.

முறையான கணக்கெடுக்கப்படும்போது சேத மதிப்பு உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்