Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கிறிஸ்மஸ் பண்டிகைக்குள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்கு 3,700 டாலர் அபராதம் - எங்கே ?

கிறிஸ்மஸ் பண்டிகைக்குள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்கு 3,700 டாலர் அபராதம் - எங்கே ?

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தில் பொதுமக்களுக்குச் சேவைவழங்குவோர் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் என வகைப்படுத்தப்பட்டுள்ள பிரிவுகளில் கடை ஊழியர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், முடி திருத்துவோர் முதலியோரும் அடங்கியுள்ளனர்.

அவர்கள் அடுத்த மாதத்திற்குள் ஒரு முறையாவது தடுப்பூசி போட்டிருப்பது அவசியமாகிறது.

கிறிஸ்மஸ் பண்டிகைக்குள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் 3,700 டாலர் அபராதம் செலுத்தவேண்டும். அத்துடன் அவர்கள் உடனடியாக பணிநீக்கமும் செய்யப்படுவர்.

ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தின் மக்கள்தொகையில் எண்பது விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் ஒரு முறையாவது தடுப்பூசிப் போட்டுக்கொண்டுள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்