Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ராட்சத பாண்டா 'அரிய' இரட்டைக் குட்டிகளை ஈன்றது

பெல்ஜியத்தில் உள்ள விலங்குத் தோட்டம் ஒன்றில் ராட்சத பாண்டா கரடி ஒன்று 'அரிய' வகை இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளது.

வாசிப்புநேரம் -
ராட்சத பாண்டா 'அரிய' இரட்டைக் குட்டிகளை ஈன்றது

(கோப்புப் படம்)

பெல்ஜியத்தில் உள்ள விலங்குத் தோட்டம் ஒன்றில்
ராட்சத பாண்டா கரடி ஒன்று 'அரிய' வகை இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளது.

அந்த அரிய வகை இரட்டை குட்டிகள் பைரி டைசா விலங்குத் தோட்டத்தில் (Pairi Daiza zoo) கடந்த வியாழக்கிழமை பிறந்ததாக அறிவிக்கப்பட்டது.

பாண்டா குட்டியில் ஒன்று ஆண், மற்றொன்று பெண்.

தற்போது பாண்டாவும் அதன் குட்டிகளும் தீவிரமாய்க் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.

ஆண் பாண்டா கரடிக் குட்டி 160 கிராம் எடையிலும்
பெண் பாண்டா கரடிக் குட்டி 150 கிராம் எடையிலும் உள்ளன.

தற்போது உலகில் 2,000க்கும் குறைவான பாண்டா கரடிகளே உள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்