Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

என்னால் முடியும்! - போர், பெற்றோரின் மறைவு ஆகியவற்றைத் தாண்டிச் சென்ற உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் படகோட்ட வீரர்

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளன. 

வாசிப்புநேரம் -
என்னால் முடியும்! - போர், பெற்றோரின் மறைவு ஆகியவற்றைத் தாண்டிச் சென்ற உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் படகோட்ட வீரர்

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: Youtube / World Rowing

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளன.

குறைகளை ஒரு பொருட்டாக நினைக்காமல், 'என்னால் முடியும்' என்று சாதித்துக் காட்டிய, சாதிக்கத் துடிக்கும் சில விளையாட்டர்களின் கதைகள், 'செய்தி' நேயர்களுக்காக!

அந்த வரிசையில், உக்ரேனைச் சேர்ந்த படகோட்டப் போட்டியாளர் ரோமன் போலியான்ஸ்கி (Roman Polianskyi) இருக்கிறார். அவர் ரியோ 2016 உடற்குறையுள்ளோருக்கான படகோட்டப் போட்டியில் வெற்றிபெற்றவர்.

அவரிடம் போட்டித்தன்மையை வளர்த்தவர் அவரது தந்தை.

அவர் 10 வயதாக இருந்த போது, கால்களின் தசைகளின் வளர்ச்சியையும் அசைவையும் பாதிக்கும் மரபுவழி நோய் அவரிடம் அடையாளம் காணப்பட்டது.

அதிலிருந்து அவர் கால்களின் செயல்பாடு பெருமளவில் குறைந்தது. இருப்பினும், அவர் அதனால் துவண்டுவிடாமல், கை-மல்யுத்தப் போட்டிகளில் பங்கெடுக்கத் தொடங்கினார்.

18 வயதாக இருக்கும்போது, விபத்தில் தம் தந்தையை இழந்தார். அதனையடுத்து, தம் தாயையும் இழந்தார். இருவரும் மாண்டபின், அவர் வாழ்க்கையைக் கைவிடாமல் தொடர்ந்து முன்னேறிச் செல்லச் சிறுவழிகளைத் தேடிச் சென்றுகொண்டிருந்தார்.

2014ஆம் ஆண்டில், அவர் வாழ்ந்த டோனெட்ஸ்க் (Donetsk) பகுதியில் போர் இடம்பெற்றது. அதனால் போலியான்ஸ்கி அந்த இடத்தைவிட்டு வெளியேறி புதியதொரு வீட்டைத் தேட வேண்டியதாயிற்று.

அந்த நேரத்தில் அவர் உள்நாட்டு அகதியாகக் கருதப்பட்டார். நிலையற்றதாக இருந்த வாழ்க்கை அவருக்கு பயமளித்தது. ஆனால், அந்த இக்கட்டான சூழலை அவர் தமக்கு சாதகமாக்கிக் கொண்டார்.

அவர் படகோட்டக் கற்றுக்கொண்ட இரண்டே ஆண்டுகளில், ரியோ 2016 ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கத்தைப் பெற்றார்!

இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டியிலும் அவர் வெற்றி அடைய முற்படுகிறார். ஆனாலும், வெற்றி அடைவது மட்டும் அவரது குறிக்கோள் அல்ல.

இவ்வாண்டுப் போட்டிகளுக்குப் பின், அவர், சிறார், உடற்குறையுள்ளவர்கள் ஆகியோருக்கு உதவி செய்யத் திட்டமிடுகிறார். விளையாட்டுப் போட்டிகள், உடற்குறையுள்ளவர்களுக்கு ஒரு பெரிய சக்தி எனக் கருதும் அவர், அனைவரையும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள ஊக்கமளிக்கிறார்.

ஆதாரம்: olympics.com 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்