Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சட்டவிரோத விளம்பரங்களுக்காக 14 மில்லியன் டாலரை Airbnb நிறுவனத்திடமிருந்து கோரும் பாரிஸ்

சட்டவிரோத விளம்பரங்களை Airbnb என்னும் அமெரிக்க வாடகை இணையத்தளம் வெளியிட்டதால் பாரிஸ் நகரம் வழக்கு தொடுத்துள்ளது.

வாசிப்புநேரம் -
சட்டவிரோத விளம்பரங்களுக்காக 14 மில்லியன் டாலரை Airbnb நிறுவனத்திடமிருந்து கோரும் பாரிஸ்

(படம்: REUTERS/Issei Kato)

சட்டவிரோத விளம்பரங்களை Airbnb என்னும் அமெரிக்க வாடகை இணையத்தளம் வெளியிட்டதால் பாரிஸ் நகரம் வழக்கு தொடுத்துள்ளது.

ஆயிரம் சட்டவிரோத விளம்பரங்களை அது வெளியிட்டது. அதற்காக 14 மில்லியன் டாலரை அந்நிறுவனத்திடமிருந்து பாரிஸ் கோரியுள்ளது.

பிரான்ஸ் நாட்டுச் சட்டத்தின்படி, பாரிஸ் வீட்டு உரிமையாளர்கள் தங்களின் வசிப்பிடங்களை ஓராண்டு காலத்தில் 120 நாள்கள் வரை வாடகைக்கு விடலாம்.

விளம்பரங்களில் பதிவு எண் இடம்பெற்றிருப்பது அவசியம். உரிய கால அவகாசத்திற்கு வாடகை வழங்கப்படுவதை அது உறுதிசெய்யும்.

அதனை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு சட்டவிரோத விளம்பரத்திற்கும் 12,500 யூரோ அபராதம் விதிக்கப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்