Images
  • police (1)
    படம்: AFP/Martin Bureau

பாரிஸில் கத்தியால் 4 காவல் அதிகாரியைக் கொன்ற ஆடவர்

பாரிஸில் உள்ள தலைமைக் காவல்துறை அலுவலகத்தின் வெளியே ஆடவர் ஒருவர் கத்தியால் 4 காவல்துறை அதிகாரிகளைக் கொன்றதாகக் கூறப்பட்டுள்ளது. 

தாக்குதலை நடத்திய ஆடவர் பின்னர் காவல்துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கட்டடத்தின் ஊழியர் என்று தெரிவிக்கப்பட்டது.

பாரிஸில் உள்ள île de la Cité பகுதி மூடப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் அதிகமான வன்முறையை எதிர்நோக்குவதன் தொடர்பில் நேற்று பிரெஞ்சுக் காவல்துறை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. அதனைத் தொடர்ந்து கொலைச் சம்பவம் நடந்துள்ளது.


Top