Images
  • paris covid
    (படம்: Reuters/Charles Platiau)

COVID-19: பாரிஸில் ஊரடங்கு உத்தரவு நடப்புக்கு வந்தது

இரவு நேரங்களில் பரப்பரப்பாக இருக்கும் பாரிஸில் COVID-19 நோய்த்தொற்றின் இரண்டாம் கட்ட பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்கில், நேற்று இரவு முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸில் பாரிஸ் உட்பட 9 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு நடப்பில் இருக்கும்.

கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருகிறது.

அதனால், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) கடந்த வாரம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார்.

கேளிக்கைக் கூடங்கள், ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளில் அதிகமானோர் கூடுவதால் நோய்த்தொற்று வேகமாக பரவுகிறது.

இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணி வரை, நான்கு வாரங்களுக்கு இரவு நேர ஊரடங்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி பிரான்ஸில் 867,197 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 33,392 பேர் மாண்டனர்.  

Top