Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பாரிஸ்: கடையில் எரிபொருள் கசிந்து விபத்து

மத்திய பாரிஸில் உள்ள ஒரு கடையின் அடித்தளத்தில் ஏரிபொருள் கசிந்ததால் ஏற்பட்ட வெடிப்பில் 4 பேர் மாண்டனர்.

வாசிப்புநேரம் -
பாரிஸ்: கடையில் எரிபொருள் கசிந்து விபத்து

(படம்: AFP)

மத்திய பாரிஸில் உள்ள ஒரு கடையின் அடித்தளத்தில் எரிபொருள் கசிந்ததால் ஏற்பட்ட வெடிப்பில் 4 பேர் மாண்டனர்.

50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

கடையைச் சுற்றியுள்ள பல கட்டடங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

விபத்து தொடர்பான காணொளி இணையத்தளங்களில் பகிரப்பட்டது, விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் சில மாடி உயரம் வரை தீ பரவுவது காணொளியில் தெளிவாகத் தெரிந்தது.

பாரிஸில் வாரயிறுதிகளில் மஞ்சள் சட்டை ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருவதால் காவல்துறையினர் அதிக அளவில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்