Images
  • paris (1)

தப்பிக்க நினைத்துத் தவறான இடத்தில் தஞ்சம்புகுந்த ஆடவர்

பிரான்சில் கார் விபத்தை ஏற்படுத்திய ஆடவர் ஒருவர் தப்பிக்கும் நோக்கில் தவறுதலாக பிரான்சின் வேவுத் துறை தலைமையகத்துக்குள் சென்று ஒளிந்துகொள்ள முயன்று மாட்டிக்கொண்டிருக்கிறார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள வேவுத்துறை தலைமையகம் 24 மணிநேரம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் கட்டடம்.
கூகுள் வரைபடத்தில்கூட அதன் படத்தைத் தெளிவாகப் பார்க்க முடியாதாம்.

கார் விபத்தை ஏற்படுத்திய ஆடவரைப் போக்குவரத்து அதிகாரிகள் துரத்தியிருக்கின்றனர். அவர் உடனடியாக ஏறிக்குதித்து வேவுத் துறை தலைமையகத்தில் ஒளிந்துகொள்ள முயன்றிருக்கிறார்.
அதிகாரிகள் ஆடவரை உடனடியாகக் கைதுசெய்தனர்.

தமக்கு அதுபற்றி ஏதும் தெரியாது என்று கூறியிருக்கிறார் ஆடவர்.

அதிகாரிகள் சம்பவத்தை விசாரித்துவருகின்றனர்.
 

Top