Images
  • paris in lockdown (1)
    (படம்: REUTERS/Pascal Rossignol)

“Yellow Vest” கலவரத்தை முன்னிட்டு மூடப்பட்ட பாரிஸ்

பாரிஸ் நகரமே இன்று (டிசம்பர் 8) காலை அமைதியில் மூழ்கியது.

காரணம்?

“மஞ்சள் சட்டை” இயக்கத்தினரின் போராட்டம் நான்காவது வார இறுதியில் தொடர்கிறது.

சுற்றுப் பயணிகளால் நிறைந்திருக்கும் பிரான்ஸில் காவல்துறையினர் சுமார் 89,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் எட்டாயிரம் பேர் பாரிஸ் நகரின் பாதுகாப்புக்காகச் சுற்றி வந்தனர்.

எரிபொருள் வரி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மஞ்சள் சட்டை இயக்கம் தொடங்கப்பட்டது.

பிரெஞ்சு அதிபர் இமெனுவல் மெக்ரோனின் (Emmanuel Macron) கொள்கைகளை எதிர்க்கும் நோக்கில் கிளர்ச்சியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்னர்.


Champs-Elysees பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வர்த்தகங்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.



 

Top