Images
  • Parking Pain
    (படம்: Reuters/ Reo Han)

விமானங்களை நிறுத்த இடமில்லாமல் தடுமாறும் நிறுவனங்கள்

COVID-19 பரவலை அடுத்து, விமானச் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன.

கிருமிப்பரவல் விமானச் சேவைத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல பில்லியன் டாலர் வருவாயை நிறுவனங்கள் இழந்துள்ளன.

அது ஒருபுறம் இருக்க, சேவையில் இல்லாத விமானங்களை எங்கு நிறுத்துவது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன நிறுவனங்கள்.

ஓடுபாதைகள், பராமரிப்புப் பணிகள் செய்யுமிடம் ஆகியவற்றை நிறுத்துமிடங்களாக நாடுகள் மாற்றிக்கொண்டிருப்பதாய் ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கை குறிப்பிட்டது.

நிறுத்தப்பட்டிருக்கும் விமானங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி சுமார் 5,000ஐ எட்டியிருப்பதாய்த் தகவல்கள் கூறுகின்றன.

வரும் வாரங்களில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

ஜெர்மனியின் ஆகப் பெரிய ஃபிராங்பர்ட் (Frankfurt) விமானநிலையம் அமைதியாகக் காட்சியளிக்கிறது. அங்கு லுஃப்தான்சா (Lufthansa) கோன்டோர் (Condor) போன்ற பல நிறுவனங்களின் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஹாங்காங், சோல், பெர்லின், வியன்னா ஆகிய இடங்களிலும் இதே நிலை.

சில நிறுவனங்கள் வேறு நாடுகளின் உதவியையும் நாடியுள்ளதாய் ராய்ட்டர்ஸ் அறிக்கை குறிப்பிட்டது.
 

Top