Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க நாடாளுமன்ற ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நிதி திரட்ட உதவிய இணையத்தளத்தை முடக்கிய PayPal நிறுவனம்

அமெரிக்காவின் நாடாளுமன்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு இணையம் மூலம் நிதி திரட்ட உதவிய தளத்திற்கு PayPal நிறுவனம் தடை விதித்துள்ளது.

வாசிப்புநேரம் -
அமெரிக்க நாடாளுமன்ற ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நிதி திரட்ட உதவிய இணையத்தளத்தை முடக்கிய PayPal நிறுவனம்

(படம்: REUTERS/Fabrizio Bensch)

அமெரிக்காவின் நாடாளுமன்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு இணையம் மூலம் நிதி திரட்ட உதவிய தளத்திற்கு PayPal நிறுவனம் தடை விதித்துள்ளது.

கடந்த வாரம் வாஷிங்டனில் திரு ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்யும் நாடாளுமன்றக் கூட்டம் நடந்தபோது அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர்.

நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து வன்செயல்களில் ஈடுபட்டனர்.

கலவரங்களில் ஐவர் மாண்டனர்.

அதில் கலந்துகொண்டவர்களுக்கு, GiveSendGo எனும் இணையத்தளம் நிதி திரட்ட உதவியதாகக் கூறப்படுகிறது.

கூட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான அலி அலெக்சாண்டரின் (Ali Alexander) கணக்கும் PayPal நிறுவனத்தால் மூடப்பட்டது.

PayPal அதுபற்றி ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனத்திடம் கூறியது.

Joy In Liberty எனும் அமைப்பின் கணக்கையும் PayPal நிறுவனம் முடக்கியதாக சென்ற வாரம் Bloomberg செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

Joy In Liberty அமைப்பு, டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வாஷிங்டனுக்குச் செல்லப் பணம் திரட்ட உதவியதாக கூறப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்