Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பெர்ல் ஹார்பர் ராணுவத் தளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம்

அமெரிக்காவின் ஹவாயி தீவிலுள்ள பெர்ல் ஹார்பர் ராணுவத் தளத்தில் ஆடவர் ஒருவர் துப்பாக்கியால் சூட்டதில், மூவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
பெர்ல் ஹார்பர் ராணுவத் தளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம்

(படம்: CNA)

அமெரிக்காவின் ஹவாயி தீவிலுள்ள பெர்ல் ஹார்பர் ராணுவத் தளத்தில் ஆடவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், மூவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கக் கடற்படையின் கடலோடி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் மாண்டனர். துப்பாக்கிக்காரர் பின்னர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு மாண்டார்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் ஒருவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனைத் தகவல்கள் கூறுகின்றன.

துப்பாக்கிச் சூட்டிற்கான நோக்கம் குறித்துத் தெளிவான தகவல் இல்லை.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த ராணுவத் தளத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளமும், ஆகாயப் படைத் தளமும் அமைந்திருக்கின்றன.

1941ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி ஜப்பான் அந்த ராணுவத் தளத்தின் மீது திடீரென்று தாக்குதல் நடத்தியது. அதில் சுமார் 2,400 அமெரிக்க வீரர்கள் மாண்டனர்.

தாக்குதலையடுத்து ஜப்பான் மீது போர் தொடுத்த அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் இணைந்துகொண்டது.

அது நடந்து கிட்டத்தட்ட 78 ஆண்டுகள் முடியவிருக்கும் நிலையில் நேற்றைய சம்பவம் நடந்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்