Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

3,000 பேரின் முயற்சியில், கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு

ரஷ்ய சிறப்புப் படை செப்டம்பர் மாத இறுதியில் கடத்தப்பட்ட 7 வயதுச் சிறுவனைக் காப்பாற்றியுள்ளது.

வாசிப்புநேரம் -
3,000 பேரின் முயற்சியில், கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு

(கோப்புப் படம்)

ரஷ்ய சிறப்புப் படை செப்டம்பர் மாத இறுதியில் கடத்தப்பட்ட 7 வயதுச் சிறுவனைக் காப்பாற்றியுள்ளது.

செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று ஜோர்கி (Gorki)கிராமத்தில் அச்சிறுவன் பள்ளிப் பேருந்தைவிட்டு இறங்கி வீடு சென்றுகொண்டிருந்த போது கடத்தப்பட்டான்.

26 வயதான சந்தேக நபர் அவனைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தத் திட்டமிட்டதாக நம்பப்படுகிறது.

Interpol எனும் அனைத்துலகக் குற்றவியல் காவல்துறை அமைப்பு, சந்தேக நபரின் இணைய நடவடிக்கைகள் மூலம் அவருக்கும் சம்பவத்துக்கும் தொடர்பிருக்கலாம் என்பதைக் கண்டறிந்தது.

அதனையடுத்து, அமைப்பு சிறுவனைத் தேடி மீட்கும் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தது.

தேடும் பணியில் சுமார் 3,000 பேர் ஈடுபட்டனர். இறுதியில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான்.

மருத்துவப் பரிசோதனையில் சிறுவனின் உடல்நலம் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

அவன் ஆரோக்கியமாக இருப்பதாக, அவனது தந்தை ரஷ்யாவின் Tass செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவ மனோவியல் நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்