Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இணையத்தின் வழி சிறாரைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய கும்பல் பிடிபட்டது

உலகின் 60 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம், இணையத்தில் சிறார் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கும்பல் பிடிபட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
இணையத்தின் வழி சிறாரைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய கும்பல் பிடிபட்டது

(கோப்புப் படம்)

உலகின் 60 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம், இணையத்தில் சிறார் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கும்பல் பிடிபட்டுள்ளது.

சுமார் ஒரு மாத காலம் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தாய்லந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 50 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

புலனாய்வு தொடர்வதால் இன்னும் அதிகமானோர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 63,000 பயனீட்டாளர்களைக் கொண்ட ரகசியத் தளத்தைப் புலனாய்வு செய்ததில், சந்தேகநபர்கள் பிடிபட்டனர்.

இணையத் தள நிர்வாகிகளுக்குக் கடந்த வாரம், ஆஸ்திரேலியாவில் 40 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறார் பாலியல் குற்றத்தின் தொடர்பில் ஆஸ்திரேலியாவில் விதிக்கப்பட்ட ஆகக் கடுமையான தண்டனை அது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்